புதன்கிழமை அன்று HTC நிறுவனம் சந்தையில் பிரபலமான செலஃபி ட்ரென்டு ஸ்மார்ட்போனான டிசயர் ஐ ஸ்மார்ட்போனை
அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள் பற்றிய தகவல்களை இதுவரை அறிவிக்கப்படவில்லை.

HTC டிசயர் ஐ ஸ்மார்ட்போன், முன் எதிர்கொள்ளும் கேமராவில் செலஃபி போகஸ்டுக்காக அமைக்கப்பட்டுள்ளது. முன் மற்றும் பின்புற கேமரா இரண்டிலுமே டூயல் எல்இடி ஃப்ளாஷ் உடன் இணைந்து 13 மெகாபிக்சல் சென்சார்கள் கொண்டிருக்கிறது.  முன் எதிர்கொள்ளும் கேமராவில் ஹய் ரெசல்யூசன் கொண்ட ஒரே ஸ்மார்ட்போன் HTC டிசயர் ஐ ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் கொண்டுள்ளது.


முன் மற்றும் பின்புற கேமராக்கள் இரண்டுமே 1080p @ 30fps வீடியோக்கள் படம் பிடிக்க முடியும். பின்புற கேமரா அம்சங்கள் a f/2.0 aperture மற்றும் ஒரு 28mm லென்ஸ் உள்ளது. முன் எதிர்கொள்ளும் கேமரா அம்சங்கள் a f/2.2 aperture மற்றும் ஒரு 20mm லென்ஸ் உள்ளது.

இரண்டு கேமரா சென்ட்ரிக் அப்ளிக்கேஷன் அதாவது ஐ எக்ஸ்பீரியன்ஸ் மற்றும் சமீபத்திய பதிப்பான HTC ஸோ, ஒரு வீடியோ எடிட்டிங் டூல் போன்றவை HTC டிசயர் ஐ ஸ்மார்ட்போனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில கேமரா அம்சங்களான ஸ்ப்லிட் கேப்ச்சர், Crop-Me-In போன்றவை HTC டிசயர் ஐ ஸ்மார்ட்போனில் கிடைக்கின்றன.

HTC டிசயர் ஐ மற்ற குறிப்புகள், இதில் 5.2 இன்ச் முழு HD LCD டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனில் 2GB RAM உடன் இணைந்து குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 801 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. HTC டிசயர் ஐ ஸ்மார்ட்போனில் microSD அட்டை வழியாக 128GB வரை விரிவாக்கக்கூடிய 16 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு, வருகிறது. மேலும் இதில் 2400mAh லி-போ பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. முன் எதிர்கொள்ளும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களில் HTC பூம் சவுண்டு தொழில்நுட்பம் மூலம் இயக்கப்படுகிறது. கைபேசியில் 151.7x73.8x8.5mm  மெஷர்ஸ் அளவிடுகிறது.

HTC டிசயர் ஐ ஸ்மார்ட்போன் குறிப்புகள்:

  • 5.2 இன்ச் முழு HD LCD டிஸ்ப்ளே,
  • 2GB RAM
  • குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 801 ப்ராசசர்
  • microSD அட்டை வழியாக 128GB வரை விரிவாக்கக்கூடிய 16 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு
  • 13 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா
  • 13 மெகாபிக்சல் பின்புற கேமரா
  • ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட்
  • 2400mAh லி-போ பேட்டரி.

Post a Comment Blogger

 
Top