ஆன்றைட்  ரூட்டிங் [Android Rooting] என்றால் என்ன?

  உங்கள் நண்பர்கள் Rooting என்று கூறிக்கொண்டு திரிவதைக் கண்டிருப்பீர்கள்! "என்னடாஇது?" ஒன்றுமே விளங்கமல் குழம்பிப் போய் இருப்பீர்கள்! Rooting என்றால் என்ன என்று இப்போது பார்க்கலாம்.
நீங்கள் ஒரு கணணி வைத்திருக்கின்றீர்கள், அதில் Windows XP OS இருக்கு  எனக்கொள்வோம், இப்போது அந்தக் கணனியில் இருக்கும் Windows XP OS ஐ அழித்துவிட்டு Windows 8 OS ஐ நிறுவ வேண்டுமென்றால் என்ன செய்வீர்கள்?

Hard Disk ஐ Format  செய்துவிட்டு Bootable  Disk (CD/DVD) இல் இருந்து Install செய்வீர்கள், ஆன்றைட்  உம் அதே போன்று தான். அதுவும் ஆன்றைட் இல்  வரும் ஆன்றைட் OS ஐ அழித்துவிட்டு உங்களுக்குப் பிடித்த உங்கள் ஆன்றைட் மொபைல்கு சப்போர்ட் செய்யும் வேறு கஸ்டம் ரோம்களை இணையத்தில்இருந்து தரவிறக்கம்செய்து இன்ஸ்டால் செய்து கொள்வதாகும்.

1.முதலில் BootLoader Unlock செய்ய வேண்டும்:
பூட்லோடர் என்றால் உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைல் பூட்ஆவதற்கு தேவையான பைல்கள்அங்கு ஸ்டோர் செய்து வைக்க பட்டிருக்கும் , அதை அன்லாக் செய்தால்தான் நாம் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும்

2.அடுத்து"ரூட்டிங்" செய்யயணும்:
ரூட் செய்வதால் நீங்கள் ஆன்ட்ராய்ட்மொபைலில் எல்லா முக்கிய பைல்களையும் ஆக்ஸ்சஸ் செய்ய முடியும். புதிய ரோம் இன்ஸ்டால் செய்வதற்கு இந்த இரண்டும் கண்டிப்பாக செய்யனும்

3.பூட்லோடர் அன்லாக் செய்த பிறகு தான் கண்டிப்பாக ரூட் செய்ய வேண்டும்

இரண்டையும் செய்த பிறகு நீங்கள்உங்களுக்கு பிடித்த கஸ்டம் ரோம்இன்ஸ்டால்செய்யலாம், ஆன்லாக்கிங் & ரூட்டிங் ஒவ்வொரு மொபைலிர்க்கும் வித்தியாசப்படும், தப்பாக செய்தால் மொபைல் பூட்டாகமல் கூட போகலாம். இணையத்தில் கொஞ்சம் நேரம் செலவழித்து , ஆராய்ந்து ரூட் செய்யுங்கள்.

Post a Comment Blogger

 
Top