Samsung Galaxy tab 3 lite 7.0 இற்கு Whatsapp ஐ Install செய்வது எப்படி



Samsung நிறுவனத்தினது Galaxy tab 3 lite 7.0 ஆனது Sim card ஐ இணைக்க முடியாதவாறு வடிவமைத்துள்ளனர். ஆகவே நாம் Google play store இல் இந்த வகையான tab இற்கு Whatsapp ஐ Download செய்ய முற்படும் போது அது
முடியாமல் போய்விடும். (அதாவது இந்த Device இற்கு Whatsapp Support இல்லை எனக்காட்டும்). இதே போன்ற இன்னும் பல வகையான Sim card இணைக்க முடியாத பல tab வகைகள் காணப்படுகின்றன. இந்த சந்தர்ப்பத்தில் நாம் இவ்வாறன tab வகைகளுக்கு Whatsapp ஐ Install  செய்வது எவ்வாறு எனப் பார்ப்போம்.

கீழுள்ள படிமுறையைப் பின்பற்றி அதைப் போன்று செய்யுங்கள்:

1. முதலில் கீழுள்ள முகவரிக்குச்சென்று உங்களுக்குரிய Whatsapp ஐ Download  செய்து கொள்ளுங்கள்:
(Whatsapp ஐ இங்கே Download செய்யுங்கள்)

2. நீங்கள் உங்கள் Tab இல் Whatsapp ஐ Download  செய்த இடத்திற்குச் சென்று அதனை Open செய்து Insatll செய்யவும். (Install  செய்யும் போது Block ஆயின் unknown sources ஐ Enable செய்யவும்)
3. அதனை Install செய்யும் போது "Agree and continue" ஐ கொடுக்கவும்.
4. நீங்கள் அவ்வாறு கொடுத்ததும் "tablets are currently not supported" எனத் தோன்றும்! Setup ஐ ஆரம்பிக்க அதற்கு "OK" கொட்க்கவும்.
5. அதற்கு அடுத்து "your phone number" எனக் கேட்கும். அதில் உங்கள் நாட்டை தெரிவு செய்து உங்கள் தொலைபேசி இலக்கத்தை கொடுங்கள். (உங்களது இலக்கத்தையே நீங்கள் கொடுங்கள்)

6. உங்கள் தொலைபேசி இலக்கத்தைக்  கொடுத்த பின் "Ok" ஐ அழுத்துங்கள்.
7. அப்போது உங்கள் தொலைபேசி இலக்கத்தை உறுதி செய்யக்கோரும்! அதற்கும் "Ok " ஐ அழுத்துங்கள்.

8. அப்போது Whatsapp உங்களுக்கு தானாகவே SMS  ஒன்றை அனுப்ப முயற்சிக்கும், ஆனால் அது பலனளிக்காது. ஆகவே உங்களுக்கு தொலைபேசி அழைப்பு மூலம் உறுதி செய்ய வேண்டி ஏற்படும்! ஆகவே "Call  Me " ஐ அழுத்துங்கள். அப்போது நீகள் கொடுத்த இலக்கத்திற்கு ஒரு call  வரும்! அதில் உங்களுக்குரிய 6 Digits  கொண்ட உறுதி செய்யும் இலக்கத்தை சொல்வர். அதனை மிகவும் கவனமாகக் கேட்டு Whatsapp இல் பதியுங்கள்.

8. அவ்வளவு தான்! இப்போது உங்கள் பெயர் மற்றும் புகைப்படத்தைக் கொடுத்து "Ok " கொடுங்கள்.

Post a Comment Blogger

 
Top