மொபைல் தொழில்நுட்பம் புதிய தலைமுறைக்கு ஏற்றவாறு வளர்ந்து கொண்டே உள்ளது.மொபைல் இல்லாத ஒருவரை பார்க்கவே அரிதாக இருக்கும் அளவுக்கு மொபைலும் அதன் தொழில்நுட்பமும் வளர்த்துள்ளது.மொபைல் தொழில்நுட்பத்தின் ஆரம்பம் மற்றும் பின்வந்த ஒவ்வொரு தலைமுறையிலும் என்னென்ன வசதிகள் மேம்படுத்தப்பட்டன என பார்ப்போம்.
1G என்பது முதல் தலைமுறை தொழில்நுட்பம். 1G ஒரு அனலாக் சிக்னல். 1G இல் அனலாக் டிரான்ஸ்மிஷன் (analog transmission) நுட்பம் குரல் சமிக்ஞைகளை (Voice Signals) கடத்த பயன்பட்டது.
இதில் AMPS (Advanced Mobile Phone System), Total Access Communication System (TACS & Extended TACS ,Narrowband TACS, Japanese TACS), Nordic Access Communications (NMT) 450 & 900), C-NETZ, Radiocom 2000, Radio Telephone Mobile System (RTMS), Nippon Telephone & Telegraph என்று வெவ்வேறு தரங்களில்பயன்படுத்தப்பட்டது. ஒவ்வொரு தரத்திலும் அதிர்வெண் பண்பேற்றம் (frequency modulation) நுட்பம் குரல் சமிக்ஞைகளுக்கு பயன்படுத்தினர். மிகக் குறைந்த அளவே அலைக்கற்றை வேகம் இருக்கும்.
இதில் தரவு பாதுகாப்பு (Data Security) மற்றும் மறையாக்கம் (encryption) எதுவும் இல்லாததால் யார் வேண்டுமானாலும் உரையாடலை எளிதில் பிழைகளை பயன்படுத்தி கேட்டு விட முடியும். அது மட்டுமில்லாமல் குறைவான குரல் தரம் மற்றும் தேவையல்லாத தலையிடுதல்கள் ஏற்படும்.

1G க்கு பிறகு வந்தது தான் 2G தொழில்நுட்பம். 2G ஒரு Digital Signal. 2G ஆனது TDMA (Time Division Multiple Access) அல்லது CDMA (Code Division Multiple Access) முறையில் இயங்கியது. இந்த தொழில்நுட்பம் GSM (Global System For Mobile Communication) என்று அழைக்கப் படுகிறது.
Digital Signal பலமான பிணைப்பு தேவை எனவே குறைவான சமிக்ஞைகள் உள்ள இடத்தில் பிணைப்பை ஏற்படுத்துவது கடினமாகிறது. 2G தொழில்நுட்பம் பேசும் வசதி, எஸ்.எம்.எஸ் வசதி (SMS), புகைப்படம் அனுப்புதல், எம்.எம்.எஸ்(MMS) போன்ற வசதிகளைக் கொண்டது. 1G தொழில்நுட்பத்தை விட சிறந்த குரல் தரம் நிலையானதாக இருந்தது.
பின் அறிமுகமான (1997) GPRS, 2.5 G என்று அழைக்கப்படுகிறது. GPRSஇல் இணையம்(WEB) 144 kbps வரை வேகமாக இருந்தது. GPRS Wireless Application Protocol (WAP) இல் இயங்குகிறது. பின் EDGE (Enhanced Data for Global Evolution or EGPRS) 1999 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 2.75G என்று அழைக்கப்படுகிறது.
2G க்கு பிறகு வந்தது தான் 3G தொழில்நுட்பம் மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பமாகும். வேகம் 144 kbps ல் இருந்து 2 MBps வரை அதிகப்படுத்தப்பட்டது. இது UMTS (Universal Mobile Telecommunication Syatem) என்று அழைக்கப் படுகிறது.
HSPA, 3.5G என்று அழைக்கப்படுகிறது . இதன் மூலம் மேலும் இணைய வேகம் அதிகப்படுத்தப்பட்டது. HSPA ஆனது HSDPA மற்றும் HSUPA நெறிமுறையை (protocol) உள்ளடக்கியது. பின் HSPA +(42MBPS) Protocol 3G யின் வேகத்தை மேலும் அதிகப்படுத்தியது. 3G தொழில்நுட்பத்தில் குரல் தரம் (Voice Signals), அதிக பாதுகாப்பு, தனியுரிமை பாதுகாப்பு, மற்றும் வீடியோ அழைப்பு (Video Calling), மொபைல் டிவி போன்றவற்றை பெற முடியும்.
இது LTE (Long Term Evolution) என்று அழைக்கப் படுகிறது. 4G ஆனது 3G யை விட வேகம் அதிகமானது. தற்போது மிகப் பெரிய நகரங்கள் மற்றும் விமான நிலையங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது மக்களிளிடையே மிகவும் குறைந்தளவிலேயே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது மிகவும் குறுகிய காலத்தில் உலக மக்கள் அனைவராலும் பயன்படுத்தக் கூடியவாறு பயன்பாட்டுக்கு வரும்.4G இணையத்திற்காகவே மேம்படுத்தப்பட்டது.
4G இனுடைய வேகம் அதிக இயக்க தொடர்பில் (High Mobility) அதிக பட்சம் 1GBps வேகத்தில் தரவுகளை (data) பெறவும் மற்றும் குறைந்த இயக்க தொடர்பில் (Low Mobility) இல் 100Mbps download மற்றும் 50Mbps upload தரவுகளை பெற முடியும். இது MIMO(Multiple In Muultiple Out ) தொழில்நுட்பத்தில் செயல்படுகிறது.
- 1G (1st Generation) - 1981
1G என்பது முதல் தலைமுறை தொழில்நுட்பம். 1G ஒரு அனலாக் சிக்னல். 1G இல் அனலாக் டிரான்ஸ்மிஷன் (analog transmission) நுட்பம் குரல் சமிக்ஞைகளை (Voice Signals) கடத்த பயன்பட்டது.இதில் AMPS (Advanced Mobile Phone System), Total Access Communication System (TACS & Extended TACS ,Narrowband TACS, Japanese TACS), Nordic Access Communications (NMT) 450 & 900), C-NETZ, Radiocom 2000, Radio Telephone Mobile System (RTMS), Nippon Telephone & Telegraph என்று வெவ்வேறு தரங்களில்பயன்படுத்தப்பட்டது. ஒவ்வொரு தரத்திலும் அதிர்வெண் பண்பேற்றம் (frequency modulation) நுட்பம் குரல் சமிக்ஞைகளுக்கு பயன்படுத்தினர். மிகக் குறைந்த அளவே அலைக்கற்றை வேகம் இருக்கும்.
இதில் தரவு பாதுகாப்பு (Data Security) மற்றும் மறையாக்கம் (encryption) எதுவும் இல்லாததால் யார் வேண்டுமானாலும் உரையாடலை எளிதில் பிழைகளை பயன்படுத்தி கேட்டு விட முடியும். அது மட்டுமில்லாமல் குறைவான குரல் தரம் மற்றும் தேவையல்லாத தலையிடுதல்கள் ஏற்படும்.
- 2G (2nd Generation) - 1991

1G க்கு பிறகு வந்தது தான் 2G தொழில்நுட்பம். 2G ஒரு Digital Signal. 2G ஆனது TDMA (Time Division Multiple Access) அல்லது CDMA (Code Division Multiple Access) முறையில் இயங்கியது. இந்த தொழில்நுட்பம் GSM (Global System For Mobile Communication) என்று அழைக்கப் படுகிறது.
Digital Signal பலமான பிணைப்பு தேவை எனவே குறைவான சமிக்ஞைகள் உள்ள இடத்தில் பிணைப்பை ஏற்படுத்துவது கடினமாகிறது. 2G தொழில்நுட்பம் பேசும் வசதி, எஸ்.எம்.எஸ் வசதி (SMS), புகைப்படம் அனுப்புதல், எம்.எம்.எஸ்(MMS) போன்ற வசதிகளைக் கொண்டது. 1G தொழில்நுட்பத்தை விட சிறந்த குரல் தரம் நிலையானதாக இருந்தது.
பின் அறிமுகமான (1997) GPRS, 2.5 G என்று அழைக்கப்படுகிறது. GPRSஇல் இணையம்(WEB) 144 kbps வரை வேகமாக இருந்தது. GPRS Wireless Application Protocol (WAP) இல் இயங்குகிறது. பின் EDGE (Enhanced Data for Global Evolution or EGPRS) 1999 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 2.75G என்று அழைக்கப்படுகிறது.
- 3G (3rd Generation) - 2001
2G க்கு பிறகு வந்தது தான் 3G தொழில்நுட்பம் மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பமாகும். வேகம் 144 kbps ல் இருந்து 2 MBps வரை அதிகப்படுத்தப்பட்டது. இது UMTS (Universal Mobile Telecommunication Syatem) என்று அழைக்கப் படுகிறது.HSPA, 3.5G என்று அழைக்கப்படுகிறது . இதன் மூலம் மேலும் இணைய வேகம் அதிகப்படுத்தப்பட்டது. HSPA ஆனது HSDPA மற்றும் HSUPA நெறிமுறையை (protocol) உள்ளடக்கியது. பின் HSPA +(42MBPS) Protocol 3G யின் வேகத்தை மேலும் அதிகப்படுத்தியது. 3G தொழில்நுட்பத்தில் குரல் தரம் (Voice Signals), அதிக பாதுகாப்பு, தனியுரிமை பாதுகாப்பு, மற்றும் வீடியோ அழைப்பு (Video Calling), மொபைல் டிவி போன்றவற்றை பெற முடியும்.
- 4G (4th Generation) - 2011
இது LTE (Long Term Evolution) என்று அழைக்கப் படுகிறது. 4G ஆனது 3G யை விட வேகம் அதிகமானது. தற்போது மிகப் பெரிய நகரங்கள் மற்றும் விமான நிலையங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது மக்களிளிடையே மிகவும் குறைந்தளவிலேயே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது மிகவும் குறுகிய காலத்தில் உலக மக்கள் அனைவராலும் பயன்படுத்தக் கூடியவாறு பயன்பாட்டுக்கு வரும்.4G இணையத்திற்காகவே மேம்படுத்தப்பட்டது.4G இனுடைய வேகம் அதிக இயக்க தொடர்பில் (High Mobility) அதிக பட்சம் 1GBps வேகத்தில் தரவுகளை (data) பெறவும் மற்றும் குறைந்த இயக்க தொடர்பில் (Low Mobility) இல் 100Mbps download மற்றும் 50Mbps upload தரவுகளை பெற முடியும். இது MIMO(Multiple In Muultiple Out ) தொழில்நுட்பத்தில் செயல்படுகிறது.

Post a Comment Blogger Facebook