Kali Linux என்றால் என்ன [What is kali linux]
Kali Linux ஓர் அறிமுகம்:
உங்களில் அநேகமானோர் "Kali Linux" எனும் பதத்தை பல இடங்களில் கேள்விப்பட்டிருபீர்கள்! இன்னும் பலருக்கு இந்தப்பதம் இது தான் முதல்தடவையாக இருக்கும்! அனைவருக்கும் இது என்ன என்பது தான் கேள்வியாக இருந்திருக்கும்! ஆம் "Kali Linux" என்றல் என்ன?
"Kali Linux " என்பதை ஒரு "Hacking OS (operating system)" என்று கூட சொல்லலாம்!
அதாவது "Kali Linux" ஆனது Ubuntu OS ஐ அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது! இதில் Hacking இற்கு பயன்படுத்தக் கூடிய அனைத்து வகையான software களையும் ஒன்று சேர்த்து ஒரு தனி OS ஐ Hackers வடிவமைத்துள்ளனர்.
இது முதலில் Backtrack என்ற பெயரிலேயே வெளிவந்தது. Backtrack இன் இறுதிப்பதிப்பு Backtrack r3 ஆகும். ஆனால் இதில் காணப்பட்ட சில கோளாறுகள் காரணமாக எல்லாம் சரி செய்யப்பட்டு வெளி வந்த பதிப்பு தன Kali Linux ஆகும். ஆகவே சிலர் இதனை Backtrack 6 எனவும் அழைக்கின்றனர்.
Kali Linux இன் பயன்பாடுகள்:
இதனைப்பயன்படுத்தி நீங்கள் விரும்பியதை Hack பண்ணலாம். இவ்வுலகில் பெரும்பாலான Hackers இதனையே பயன்படுத்தி அனைத்தையும் Hack செய்கின்றனர். ஆகவே நீங்கள் ஒரு சிறந்த Hacker ஆக வேண்டும் என விருப்பம் உடையவராக இருந்தால் நான் உங்களுக்கு Suggest பண்ணுவது இந்த Kali Linux OS ஐ தான். நீங்களும் இதனை Download செய்து பாவித்துப்பாருங்கள். இதனது(Download Link கீழே உள்ளது).இதனை நீங்கள் முழுமையாகக் கற்றால் நீங்கள் தான் Master Hacker!!! இதன் முக்கிய என்னவென்றால் இதனை நீங்கள் ஏற்கனவே பயன்படுத்திக்கொண்டிருக்கும் Windows ஐ அழித்து விடாமல் இதனை Install செய்து கொள்ளலாம். அல்லது Pendrive ஒன்றில் நிறுவிக்கொண்டு தேவையானபோது பாவிக்கலாம்.
- More than 300 penetration testing tools: 300 இற்கும் அதிகமான penetration testing tools இதில் காணப்படுகின்றன. மீளாய்வு செய்யப்பட பின்பு Backtrack இல் காணப்பட்ட கோளாருடைய அநேகமான கருவிகள் இதிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
- Free and always will be: Kali Linux ஆனது எப்பொழுதும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இதனை நீங்கள் ஒருபோதும் கட்டணம் செலுத்தி Download செய்ய வேண்டி ஏற்படாது.
- Open source Git tree: இது ஒரு Open Source வடிவமைப்பு ஆகும். ஆகவே இதனை அனைவராலும் பயன்படுத்த முடியும். மேலும் இதில் மாற்றங்களை ஏற்படுத்த விரும்பினால் மாற்றங்களை ஏற்படுத்தவும் முடியும். இதிலுலுள்ள Software களை மேம்படுத்தவும் முடியும்.
இது போன்ற இன்னும் பல வசதிகள் இதில் காணப்படுகின்றன:
- FHS compliant
- Vast wireless device support
- Custom kernel patched for injection
- Secure development environment
- GPG signed packages and repos
- Multi-language
- Completely customizable
- ARMEL and ARMHF support
இது பற்றி மேலும் விரிவாக அறிய கீழுள்ள முகவரிக்கு செல்லுங்கள்:
இந்த Kali Linux OS ஐ Download செய்ய கீழே உள்ள தளத்திற்குச் செல்லுங்கள்:
இந்தியர்கள் இங்கே உள்ள தளத்திட்குச்செள்ளவும்:
குறிப்பு:
இதனை உங்கள் Android Phone களிலும் நிறுவிக்கொள்ளலாம்.
.jpg)
Post a Comment Blogger Facebook