இன்றைய தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிப்பது சென்சார்கள் எனலாம். அதன் பயன்பாடு அனைத்திலும் அத்யாவசியமாக உள்ளது.அப்படி மொபைலில் பயன்படும் சில தெரிந்துகொள்ள வேண்டிய சென்சார்கள் மற்றும் அதன் பயன் என்ன என்று பார்ப்போம்.

1)  PROXIMITY

Proximity சென்சார் அருகிலுள்ள பொருட்களை தொடாமல் அறிய பயன்படுகிறது. மின்காந்த(Electromagnetic) கதிர்களை பயன்படுத்தி பொருட்களின் மீது பட்டு திரும்பும் கதிர்களை கொண்டு உணர்கிறது.உலோகம் மற்றும் பிளாஸ்டிக் போன்றவற்றை உணர ஒவ்வொன்றுக்கும் தனித்தனி Proximity சென்சார்கள் பயன்படுத்தப்படுகிறது. இது மொபைலில் நாம் அழைப்பில்(call) பேசிக்கொண்டு இருக்கும்போது ,தொடுதிரையை அணைத்து வைக்க பயன்படுகிறது.

2) ACCELEROMETER

இது மொபைலில்  சாய்தல் (TILT) மற்றும் அசைவு (MOTION) ஆகியவற்றை உணர பயன்படுகிறது. அசைவு மூலம் ORIENTATION  நிலையை தானியங்கி (AUTO ROTATE)முறையில் இயக்க முடிகிறது(PORTRAIT AND LANDSCAPE MODE). இது செங்கோன அச்சுக்கள்(ORTHOGONAL AXES) மூலம் இயங்குகிறது. சாய்தல்(TILT) மொபைலில் விளையாட ,MUSIC PLAYER  ஆகியவற்றில் பயன்படுகிறது.

3) GYROSCOPE

இது ACCELEROMETER போலவே மொபைலில் ORIENTATION-ஐ பராமரிக்க பயன்படுகிறது. ACCELEROMETER அச்சுக்கள் மூலம் இயங்குகிறது ஆனால் GYROSCOPE சென்சார் சுழல் உந்தம்(ANGULAR MOMENTUM) முறையில் செயல்பட்டு தொடுதிரையின் நிலையை சரியாக அளவிடுகிறது. இதன் மூலம் சிறந்த விளையாட்டு(GAMING EXPERIENCE) அனுபவத்தை பெற முடியும். (எடுத்துக்காட்டாக COUNTER STRIKE போன்ற விளையாட்டுக்கள் )

4) DIGITAL COMPAS

இது புவி காந்தப்புலம்(EARTH MAGNETIC FIELD) மூலம் செயல்படுகிறது.கிழக்கு, மேற்கு,வடக்கு,தெற்கு போன்ற திசைகளை அறிய பயன்படுகிறது.நீங்கள் MAPS போன்ற மென்பொருளை பயன்படுத்தும் போது செயல்பட்டு தானியங்கி(AUTO ROTATE) முறையில் சுழலும்.

5) BAROMETER

இது வளிமண்டல அழுத்தத்தை(ATMOSPHERIC PRESSURE) கணக்கிடுகிறது.இதன் மூலம் உயர்நிலை(ALTITUDE) மற்றும் அவ்வப்போது மாறும் வானிலை மாற்றங்களை அறிய பயன்படுகிறது.உங்கள் மொபைலின் இணைய இணைப்பை பயன்படுத்தி தரவுகளை(DATA) பெற்று நீங்கள் இருக்கும் இடத்திற்கு(GEO-LOCATION) ஏற்ற வானிலை மாற்றங்களை வழங்குகிறது. BAROMETER மூலம் வேகமான மற்றும்  துல்லியமான மாற்றங்களை பெற முடியும்.

6) AMBIENT LIGHT

இது தொடுதிரையின் வெளிச்சத்தை(BRIGHTNESS) வெவ்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்ப தானியங்கி(AUTOMATIC) முறையில் இயக்க பயன்படுகிறது. இதன் மூலம் பேட்டரியை மிச்சப்படுத்தவும் மற்றும் தெளிவான திரையையும் பார்க்க உதவுகிறது.

Post a Comment Blogger

 
Top